2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் மஹஜனா விளையாட்டரங்கு ரூ.200 மில்லியன் செலவில் புனரமைப்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 07 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மஹஜனா விளையாட்டரங்கு இருநூறு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

இவ்விளையாட்டரங்கில் இரண்டு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளதோடு ரகர் மற்றும் கால்பந்து விளையாட்டுக்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன. மேலும் 5000 பார்வையாளர்கள் அமரக் கூடிய பார்வையாளர் அரங்கு, 1500 அதிதிகள் அமரக்கூடிய வசதிகள், 50மீற்றர் நீளமான நீச்சல் தடாகம், தங்குமிட வசதிகள் உள்ளடங்கலாக 46 விளையாட்டுக்களை விளையாடக்கூடிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இதன் அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி ப்ரேம்லால் திஸாநாயக்கா, பிரதியமைச்சர் துமிந்த திஸாநாயக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் சேமசிங்க உட்பட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை 2012ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 200 கோடி ரூபா செலவிலான அபிவிருத்திப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 22 பிரதேச செயலாளர் காரியாலய பிரிவுகளிலும் இவ்வபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X