2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விசர் நாய் கடித்ததினால் 6 பேர் காயம்

Kogilavani   / 2011 ஜூன் 26 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், ரத்மல்யாய பிரதேசத்தில் விசர் நாயொன்று கடித்ததினால் 5 வயது சிறுமி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விசர் நாய் ரத்மல்யாய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை முதல் சுற்றித்திரிந்து வீதியில் செல்வோரை கடித்து வருகின்றது.

இதனால் காயமுற்றவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுக் கொண்டு சென்றபோதும், 5 வயது சிறுமியொருவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இம் மாதம் முதல் புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களில் விசர்நாய் கடிக்குள்ளாரவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


  Comments - 0

  • IBNU ABOO Monday, 27 June 2011 01:49 AM

    கடித்த நாய்க்கு என்னநடந்தது. தப்பிவிட்டதா அல்லது கொல்லபட்டதா. நாய் தப்பி இருந்தால் மிக ஆபத்தான செய்தியே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X