2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுமி பலி

Menaka Mookandi   / 2011 மே 26 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று புத்தளம், ஆனைக்கட்டுவான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த நதீஷானி என்ற சிறுமியே உயிரிழந்தவராவார். நேற்று மாலை குறித்த பகுதியில் அமைந்துள்ள மேற்படி கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கச் சென்ற போதே அவர் தவறி அதில் விழுந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X