Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 22 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 11 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவ பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட புகாரி ராஸிக் 2,570 வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தையும் இப்பலோகம பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட எம்.என்.அப்துல் லத்தீபு 1,735 விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையும் திறப்பனை பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட ஏ.அன்வர் சதாத் 2,738 விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.தௌபீக் 2,447 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் றம்பாவ பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட எஸ்.தையுப் 2,580 விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.அய்.சாஹிபு 1,980 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் கஹட்டகஸ்திகிலிய பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட என்.பீ.எம்.இக்பால் 2,660 விருப்பு வாக்குகளைப் பெற்று ஆறாம் இடத்தையும் ஹொரவப்பொத்தானை பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட ஏ.ஆர்.அப்துல் ஹூஸைன் 4,299 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் ஏ.எம்.எம்.இஸ்மாயில் 1,882 விருப்பு வாக்குகளைப் பெற்று ஆறாம் இடத்தையும் என்.பீ.செய்யத் முஹம்மட் 1,772 விருப்பு வாக்குகளைப் பெற்று ஏழாம் இடத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.இப்ராஹிம் சாஹிபு 1980 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago