2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் 192,015 வாக்களிக்கத் தகுதி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 17 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில்  192,015 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில்  ஒரு நகரசபை  உட்பட மூன்று பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைறெவுள்ளது.

சிலாபம்  நகரசபைக்கு  16,586 பேரும்  சிலாபம் பிரதேசசபைக்கு  63,446 பேரும்  நவகத்தேகம பிரதேசசபைக்கு  11,191 பேரும்  வென்னப்புவ பிரதேசசபைக்கு  100,789  பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  

இந்த நான்கு  உள்ளூராட்சிசபைகளுக்கும் 141 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.   சிலாபம் நகரசபைக்காக  13 வாக்களிப்பு நிலையங்களும்   சிலாபம் பிரதேசசபைக்காக 45 வாக்களிப்பு நிலையங்களும் நவகத்தேகம பிரதேசசபைக்கு    08 வாக்களிப்பு நிலையங்களும்  வென்னப்புவ பிரதேசசபைக்கு 45  வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X