Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 26 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
கடலறிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 வருடங்களாக கூடாரங்களிலேயே வசித்து வரும் புத்தளம், மாரவில, முஹுதுகட்டுவ கரையோர பிரதேசத்தைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கும் ஒரு மாத காலப்பகுதிக்குள் நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று உறுதியளித்தார்.
அத்துடன், குறித்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு அம்மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடலறிப்பு காரணமாக தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் முஹுதுகட்டுவ எனும் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி மக்கள் கடந்த 3 வருடங்களாக தற்காலிக கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர்.
இவர்களின் நிலைமை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே, புத்தளம் மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து மேற்படி உறுதிமொழிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .