2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிராமத்திற்குள் புகுந்த 30 யானைகள்

Super User   / 2011 ஏப்ரல் 17 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரம் தலாவ பிரதேசத்திலுள்ள கிரிலோகம கிராமத்திற்குள் இன்று காலை சுமார் 30 யானைகள் புகுந்தன. இதனால் கிராமவாசிகள் பலர் அச்சத்தினால் ஓட்டம் பிடித்தனர்.

சுமார் 6 மணித்தியாலங்கள் இந்த யானைகள் கிராமத்திற்குள் அலைந்து திரிந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் கடும் சிரமத்தின் மத்தியில் பொலிஸாரின் உதவியுடன் கிராமவாசிகள் யானைகளை துரத்தினர். யானைகளை விரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பலத்த சத்தங்களையும் எழுப்பியதாக கிராமவாசிகள் கூறினர். (அதுல பண்டார)



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X