2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஹொரவப்பொத்தானை வீதி புனரமைப்புக்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2011 மே 03 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                   
அநுராதபுரம் ஹொரவப்பொத்தானையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமுற்ற சகல கிராமிய வீதிகளையும் புனரமைப்புச் செய்வதற்காக இரண்டு கோடி ஐம்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஹொரவப்பொத்தானை தேர்தல் தொகுதியில் சுமார் 600 கிலோ மீற்றர் கிராமிய வீதிகள் வெள்ளப் பெருக்கினால் சேதமுற்றுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம்,  கமநல சேவைகள் அமைச்சின் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ பொறியியலாளர் படை ஆகியன இவ் வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கான நிதியுதவி,  இயந்திர உபகரணங்கள் மற்றும் மனித வேலைகளையும் வழங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X