2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்குதவாத 5,000 கிலோகிராம் அரிசி கைப்பற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                

புத்தாண்டு காலப்பகுதியில் அநுராதபுரம் கிழக்கு நுவரகம் பிரதேசத்தில் பாவனைக்குவாத 5,000 கிலோகிராம் அரிசியினை அநுராதபுரம் மாநகரசபையினர் கைப்பற்றியுள்ளனர்.

அண்மையில் அநுராதபுரம் மாவட்டத்தில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு ஸ்தாபனத்தால் ஒரு தொகை அரிசி கிடைக்கப்பெற்றதோடு விநியோகிக்கப்பட்ட அரிசி வகைகளில் புழுக்கள் இருந்தமை தொடர்பாக நபர் ஒருவர் அநுராதபுரம் மாநகர சபையிடம் புகார் செய்திருந்தார்.

இதனையடுத்து நகர ஆணையாளர் சம்பத் தர்மதாஸ அநுராதபுரம் கிழக்கு நுவரகம் பிரதேச செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி அநுராதபுரம் மாநகரசபையின் மக்கள் சுகாதார பரிசோதகர் குழு பாவனைக்குதவாத அரிசி வகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X