2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி; 6 பேர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளத்திலிருந்து, நிக்கவரட்டிக்கு சென்றுகொண்டிருந்த லொறி வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணியளவில் சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு நிக்கவரட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியே புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சி பகுதியில் வீதியை விட்டு விலகிச்சென்று விபத்திற்குள்ளானது.  

அஜன்த விஜயகோன் (வயது 35), உபாலி ராஜகருண (வயது 30), ஆகியோரே விபத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பெண்கள் மூவரும் 8 வயது சிறுமியொருவரும் அடங்குவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X