2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாணவியின் நிர்வாண படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியவர் கைது

Kogilavani   / 2011 மே 24 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

18 வயதுடைய மாணவி ஒருவரின் நிர்வாணப் படங்களை இணையத்தளத்தில் வெளியிடப் போவதாகவும், அவ்வாறு செய்யாதிருக்க வேண்டுமெனில் தனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தரவேண்டும் எனவும் கோரி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒருவர் குருநாகல் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று குருநாகல் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி தனது பெற்றோருடன் குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவிடம் செய்த முறைப்பாட்டினைத் தொடர்;ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X