2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தொலைபேசி கேபில்கள் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Super User   / 2011 மார்ச் 06 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

பாலாவி கற்பிட்டி வீதியில் இரண்டாம் மைலுக்கருகில் தொலைபேசி கேபில்கள்  வெட்டப்பட்டுள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

40 மீற்றர் நீளமான  100 வயர்களுல்ல தொலைபேசி கேபில்கள்   4ஆம்  திகதிக்கும்  6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் வெட்டப்பட்டுள்ளதாக புத்தளம்  டெலிகொம் வீதி பரிசோதகர் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வெட்டப்பட்டுள்ள கேபில்களின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X