2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரம் களஞ்சியசாலை நெல்லை கட்டுப்பாட்டு விலையில் விற்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 மார்ச் 07 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

கட்டுப்பாட்டு விலையில் அரியினை மக்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் களஞ்சியசாலையில் கழஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கிலோ நெல்லினை அரிசியாக்கி சந்தையிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் அரிசியினை சதொச ஊடாக மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் பிரதேச முகாமையாளர் பந்துல குமார தெரிவித்தார்.

அநுராதபுரம் நெல் களஞ்சியசாலையில் தற்பொழுது 21000 மெட்ரிக் தொன் நெல் உள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X