2025 ஜூலை 21, திங்கட்கிழமை

புத்தளம் தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் ரவுப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 09 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(என்.எம்.எம்.ஹிஜாஸ்,எம்.எஸ்.மும்தாஜ்,றஸீன் றஸ்மின்)

புத்தளம் மக்கள், புத்தளம் நகரசபை ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்கினால் அதற்கு பிரதி உபகாரமாக முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்திற்கு மீண்டுமொரு அரசியல் சிம்மாசனத்தை வழங்குமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புத்தளம் நகரில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் உயர்பீட மற்றும் அரசியல்பீட உறுப்பினர்களும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை நேற்றையதினம் ஆராய்ச்சி கட்டுவ பிரதேசசபை, கற்பிட்டி பிரதேசசபை, புத்தளம் பிரதேசசபை என்பனவற்றில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து புளிச்சாக்குளம், கற்பிட்டி, கடையாமோட்டை, நாகவில்லு ஆகிய பிரதேசங்களில் நடைப்பெற்ற பொது   கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X