2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தேர்தலுக்கு தயாரகும் புத்தளம் பொலிஸார்

Super User   / 2011 மார்ச் 16 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம்  பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பொலிஸ் பிரிவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பணிகளுக்காக பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.தர்மசேன தெரிவித்தார். 

புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பிரிவில் 140 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

140 வாக்குச் சாவடிகளுக்காக 928 பொலிஸாரும் 154 இராணுவத்தினரும் 324 கடற் படையினரும் 85  விசேட அதிரடிப் படையினரும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள், நடமாடும் பொலிஸ் ரோந்து  சேவை,  வீதி தடைகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X