2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 20 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர்கள் இருவருடைய ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் கல்பிட்டி வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்ச் சம்பவம் கல்பிட்டி, நுரைச்சோலை வர்த்தக மையத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக  கருதப்படும் மூவர்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தற்போது நுரைச்சோலை மற்றும் நரக்கள்ளி பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X