2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வடமத்திய மாகாணத்தில் சிறுவர் கழகங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 21 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                              

வடமத்திய மாகாணத்திலுள்ள சிறுவர்களின் நலன் கருதி சிறுவர் கழகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வடமத்திய மாகாண சுகாதார மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சர் பேஷல ஜயரத்னவின் ஆலோசனையின் பிரகாரமே இச்சிறுவர் கழகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வடமத்திய மாகாணத்தில் கஷ்டப் பிரதேச சிறுவர்களின் திறன்களை வெளிக்கொணர்தல், சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துதல், பிரச்சினைகளுக்கும் தாக்கங்களுக்கும் உட்படாத வகையில் சிறுவர்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவே சிறுவர் கழகங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதேச சுகாதார தாதிகள் ஊடாக சிறுவர் கழகங்கள் உருவாக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X