2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பொஸன் உற்சவத்திற்கான முன்கூட்டிய ஏற்பாடுகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 21 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                               

அநுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ள பொஸன் உற்சவத்தை முன்னிட்டு சகல ஒழுங்குகளும் முன்கூட்டியே  செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளரும் பொஸன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி பொஸன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்களை மையமாகக் கொண்டு விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதி பொஸன் வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X