Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 21 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கல்பிட்டி பிரதேச சபைக்கு வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களுக்கிடையில் எவ்வித காழ்ப்புணர்ச்சிகளும் இல்லையென்று புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்ரனி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சில சக்திகள் பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்த முனைவதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென்றும் அவர் கூறினார்.
தேர்தல் முடிவடைந்து விருப்பு வாக்குகள் வெளியானதையடுத்து கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை பகுதியில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்து இருவர் காயமடைந்த நிலையில் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்ரனி தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. அதில் போட்டியிட்ட வேபட்பாளர்களுக்கும் தாக்குதல் சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவமாகும். இது குறித்து உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். பிரதேசத்தில் இனங்களுக்கிடையில் கசப்புணர்வை ஏற்படுத்தும் செயலுக்கு சிலர் தூபமிடுகின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago