2025 ஜூலை 21, திங்கட்கிழமை

உழுக்குளத்தில் புதிய யானைகள் சரணாலயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 21 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                              

அநுராதபுரம் உழுக்குளம் பகுதியில் யானைகள் சரணாலயமொன்று அமைக்கப்படவுள்ளது.  கமநல சேவைகள் மற்றும் வனஜீவன அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் ஆலோசனைப்படி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இச்சரணாலயம் அமைக்கப்படவுள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் யானைகள் - மனிதர்கள் மோதலில் காயமடையும் யானைகளுக்கும் இடம்பெயர்ந்து செல்லும் யானைக் குட்டிகளுக்கும் சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்கும் நிலையமாகவும் இச்சரணாலயத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இச்சரணாலயத்தை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X