2025 ஜூலை 21, திங்கட்கிழமை

விருப்பு வாக்கு எண்ணுவதில் தவறுகள் கண்டுபிடிப்பு

Kogilavani   / 2011 மார்ச் 21 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் குறைபாடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் முறைகேடுகள் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அச்சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அஸோக்க குணரத்ன அநுராதபுரம் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.கே.ஹேரத்திடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி வாக்குகளை மீள எண்ணியபோது குறைபாடு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

47ஆம் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் கணக்கெடுக்கப்பட்ட விருப்பு வாக்குகள் இறுதி கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இதன்படி தேர்தலில் போட்டியிட்டவர்களின் விருப்புவாக்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முறைப்பாட்டினை செய்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு மேலும் 986 விருப்பு வாக்குகள் அதிகரித்துள்ளன. முதல் இடத்திலிருந்தவர் ஐந்தாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X