Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 22 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில மீனவக் கிராமத்திலுள்ள பாலடைந்த கட்டிடடமொன்றின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பாடசாலைச் சீருடை, கழுத்துப்பட்டி, கீழாடை ஆகியவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை காலை இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட பாடசாலை சீருடையை வைத்து பாடசாலை இனங்காணப்பட்டுள்ளபோதிலும், மேற்படி சீருடை யாருடையதென்று தெரியவரவில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஒருவகை பழங்களைப் பறிப்பதற்காக குறித்த இடத்திற்குச் சென்ற சிறுவர்கள் பாழடைந்த கட்டடத்தின் பின்புறத்தில் பாடசாலைச் சீருடை காணப்படுவதை கண்ட நிலையில், அது தொடர்பில் தமது பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அப்பகுதி கிராம அலுவலரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago