2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த அனல் மின்நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

லக்விஜய என்னும் அனல் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் 300 மெகாவோட் மின்சாரம் இன்று முதல் தேசிய மின் வலையமைப்பாக இணைக்கப்படவுள்ளது.

 இந்த அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் 900 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள் 300 மெகாவோட் உற்பத்திகளைக் கொண்ட மூன்று கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன் முதலாவது கட்டம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளன.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 2006ஆம் ஆண்டு ஆரம்பமானது.  இதற்காக 5080 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்நிதியில் 4550 கோடி ரூபாவை சீன அரசு கடனாக வழங்கியுள்ளதுடன், இலங்கை அரசு 530 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X