2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கற்பிட்டி பிரதேசசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 22 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

கற்பிட்டி பிரதேசசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் விருப்பு வாக்கு தொடர்பாக ஏற்பட்ட கைலகப்பில் அதேகட்சியைச் சேர்ந்த நபர் ஒருவரைத் தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று திங்கட்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இம்மாதம் 28ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய ஹேசாந்த த மெல் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிறில் அலெக்சாண்டர் உட்பட சிரான் சுரேஷ் மற்றும் ரஜினி குமார் ஆகிய மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.  

இவர்கள் சார்பப்ல் ஆஜரான சட்டத்தரணிகள், இம் மூவருக்கும் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினர்.  சகல வாதங்களையும் கேட்ட நீதவான், பிரதேசசபை உறுப்பினரான முதலாவது சந்தேக நபர் இதற்கு முன்னர் இதேபோன்றதொரு சம்பவத்தில் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் சென்றுள்ளதாலும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினால் பிரதேசத்தில் மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படவும் பிரச்சினைகள் ஏற்படவும் நேரிடுமெனவும் தேர்தல் முடிவடைந்து சில நாட்களே கடந்துள்ளதாலும் சந்தேக நபர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

கற்பிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X