2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குத்தகைக்கு வழங்கப்பட்ட இலங்கையின் இரு தீவுகள்

Super User   / 2011 மார்ச் 22 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

கற்பிட்டிக்கு அருகிலுள்ள இரு தீவுகளை இரு வெளிநாட்டு கம்பனிகளுக்கு 18 மில்லியன் ரூபாவுக்கு 30 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உல்லாசப் பயணத்துறையில் முதலீடு செய்வதற்காக இத்தீவுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வெள்ளைத் தீவு எனும் தீவு 3.7 மில்லியன் ரூபாவுக்கு இலங்கை, மாலைதீவு, சுவிட்ஸர்லாந்து நாடுகளுக்கிடையிலான கூட்டு முதலீட்டுத் திட்டமொன்றுக்காக வழங்கப்பட்டுள்ளது. இன்பத்தீவு 14 மில்லியன் ரூபாவுக்கு இந்திய கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு 5 வருடமும் குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X