2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அநுராதபுரத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
 
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அநுராதபுரம் நகரத்தில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணி முதல் அநுராதபுரம் தலைமையகப் பொலிஸாரின் ஏற்பாட்டில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டாக இணைந்து இச்செயற்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் தலைமையில் சுமார் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு அநுராதபுரம் நகரத்திலுள்ள விற்பனை சாலைகள், உணவகங்கள், வீடுகளில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X