Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
கல்பிட்டி பிரதேசசபையின் புதிய தலைமைத்துவத்தின் கீழான முதலாவது சபை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக கல்பிட்டி பிரதேசசபையின் புதிய தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் கல்பிட்டி பிரதேசசபையின் தலைவராக எம்.மின்ஹாஜ் மற்றும் பிரதித் தலைவராகப் கிரேஷன் குரேரா ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இன்றைய முதலக்வது சபை அமர்வில் சபையின் புதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் எம்.எச்.எம்.மின்ஹாஜ் தெரிவித்தார்.
நடந்து முடிந்த கல்பிட்டி பிரதேசசபைக்கான தேர்தலில் எம்.எச்.எம். மில்ஹாஜ் ஆகக் கூடிய விருப்பு வாக்குகளாக 9,453 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்திலும் பிரதி தலைவராகப் பதவியேற்றுள்ள எம்.கிரேஷன் குரேரா 5,574 விருப்பு வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றிருந்தனர். முன்னாள் கல்பிட்டி பிரதேசசபைத் தலைவரான எம்.எஸ்.சேகு அலாவுதீன் 3,593 விருப்பு வாக்குகளைப் பெற்று ஒன்பதாவது இடத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
40 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago