2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அறநெறி பாடசாலைகளில் ஆயுர்வேதக் கல்வி

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

ஆயுர்வேத வைத்திய துறையை வடமத்திய மாகாணத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளில் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக வடமத்திய மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

பாரம்பறிய வைத்தியத் துறையை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்புகளில் இப்பாடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வருட காலப் பகுதிக்குள் சுமார் 50 வைத்திய முறைகளைக் கற்றுக் கொள்ள முடியும். இப்பாடத்திற்காக புதிய பரீட்சையும் நடாத்தப்படும்.

இதற்காக தேவையான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை,  அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள கிராமங்களை முன்னிலைப் படுத்தி பல்வேறு வேலைத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X