2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தில்லையடி வீதியோரங்களில் குப்பைகூழங்கள்; துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரசபைக்குட்பட்ட தில்லையடி பிரதான வீதியோரங்களில் குப்பைகூழங்கள் கொண்டு வந்து கொட்டப்படுவதால் அப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதான வீதியின் இருமருங்கிலும் இறைச்சிக் கடையிலுள்ள கழிவுகளும் வீட்டுக் கழிவுப் பொருட்களும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.  இதனால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் போக்குவரத்து செய்வதிலும்  அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X