2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதுவருட கொண்டாட்டத்தில் மோதல்; கத்திக்குத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மும்தாஜ்)

முந்தல், தாராவில்லு பிரதேச புதுவருடக் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 12 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 34 வயதான ஈ.எம்.விஜேவீர என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவத்தில் காயமடைந்தவர் முந்தல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பிரதேசத்தில் நேற்று மாலை புதுவருடக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம்பெற்றதுடன் அது சுமூகமாகத் தீர்க்கப்பட்ட நிலையில் அனைவரும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மேற்படி விஜேவீர என்பவரின் வீட்டுக்கு நேற்று இரவு 12 மணியளவில் முச்சக்கரவண்டியில் சென்ற இனந்தெரியாதோர் சிலர் விஜேவீரவையும் மற்றொருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் விஜேவீர அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் கத்திக்குத்துக்கு இலக்கான மற்றைய நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் பிரேத வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X