2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் ஒரு இலட்சம் ஏக்கரில் சோளப் பயிர்ச்செய்கை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு ஒரு இலட்சம் ஏக்கரில் சோளம் பயிரிடுவதற்குத் தேவையான சகல வசதிகளையும் விவசாயிகளுக்கு செய்து கொடுக்குமாறு கமநல சேவைகள் மற்றும் வனஜீவன அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன  கமநல  திணைக்களப் பணிப்பாளருக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டில் சோளப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. இதனால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் வெளிநாடுகளிலிருந்து சோளத்தை இறக்குமதி செய்ய நேரிடும். சிறுபோகத்தின்போது நெல் பயிரிடப்படாதுள்ள காணிகளிலும் சோளம் பயிரிடப்படவுள்ளது.

சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 4 வீத வட்டியில் 20,000 ரூபாய் கடன் உதவியும் மானிய அடிப்படையில் உரவகைகளையும் உயர்ரக விதை இனங்களையும் வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X