2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 21 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதாலும் கடும் காற்று வீசுவதாலும் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடும்  காற்று காரணமாக வீதிகளுக்கு குறுக்கே மரங்கள் முறிற்து வீழ்ந்து காணப்படுகிறது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், போக்குரவத்தும் தடைப்படுகிறது.  அத்துடன் மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதனால் மின்சாரம் துண்டிக்கப்படுவதுடன்,  இரவு 9 மணி வரையில் மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X