2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளத்தை தளமாகக் கொண்டு இயங்கி வரும் சமூக நம்பிக்கை நிதியம் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

கலை, கலாசார நிகழ்வுகள் மூலம் பொதுமக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தி வரும் இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 24ஆம் திகதி வண்ணாத்தவில்லு பிரதேசத்திலும் 28ஆம் திகதி கற்பிட்டியிலும் 30ஆம் திகதி கடையாமோட்டையிலும், மார்ச் மாதம் முதலாம் திகதி புத்தளத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக சமூக நம்பிக்கை நிதியத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X