2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார், கிளிநொச்சியிலிருந்து நெல் கொள்வனவு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 25 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

நெல் கொள்வனவு அதிகார சபையினால் மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலிருந்தும் நெல்லினைக் கொள்வனவு செய்து வருவதாக அநுராதபுரம் வலய நெல் கொள்வனவு அதிகார சபையின் முகாமையாளர் ஆர்.டப்ளியு.பந்துல குமார தெரிவித்தார்.

மன்னார், அல்கடவேலி மற்றும் கிளிநொச்சி மாங்;குளம், துணுக்காய், கிளிநொச்சி பகுதிகளிலுள்ள களஞ்சியசாலைகளில் 3000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனமான போரூட் அமைப்பு 5 களஞ்சியசாலைகளை நெல் கொள்வனவு அதிகார சபைக்கு அமைத்துக் கொடுத்துள்ளது,
மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் மேலும் 2000 மெட்ரிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் 50000 மெட்ரிக் தொன் நெல்லினைக் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டுப்படுத்தப்படாதளவில் நெல்லினைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நெல் கொள்வனவு அதிகார சபையின் அநுராதபுரம் வலய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X