Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
மாம்புரி பிரதேசத்தில் கடலுக்கு அருகிலுள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை இரவு கரையொதுங்கியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் ஆவர்.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண்டிகம கல்குளி பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து மீனவர்களும் பிரதேசவாசிகளும் இவரைத் தேடும் பணியில் ஈடுபட்டபோதிலும் நேற்று முழுவதும் அது பலனளிக்கவில்லை. நேற்றிரரவு இவரது சடலம் நுரைச்சோலை கடற்பரப்பில் கரையொதுங்கியதாக புத்தளம் பொலிஸார் கூறினர்.
இவரது சடலம் புத்தளம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago