2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்காமை குறித்து மாநகரசபை உறுப்பினர்கள் கடிதம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு உலர் உணவு முத்திரைக்கான பொருட்கள் வழங்கப்படாதது குறித்து  மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கு யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் மூவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

என்.எம்.முஸ்தபா, பீ.அஸ்கர் ருமி, ஏ.அஸ்பர் ஆகிய மாநகரசபை உறுப்பினர்களே உலர் உணவு வழங்கப்படாமை குறித்து மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

கடிதத்தின் பிரதிகள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, குணரத்ன  வீரக்கோன், ரிஷாட் பதியுதீன், வடமாகண வடமேல் மாகாண ஆளுநர்களுக்கும்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.    

கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன்  மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையக்ன காலப்பகுதியில் உலர் உணவு முத்திரைக்கான பொருட்கள் வழங்கப்பட்டபோதும், மூன்று மாதங்களுக்கான   பொருட்கள்  மாத்திரமே பலநோக்கு கூட்டுறவு சங்கம் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது. மிகுதி மூன்று மாதங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று  வரை வழங்கப்படவில்லை.

புத்தளத்தில் இயங்கி வரும் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகமும் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மக்களுக்கு வழங்கப்படாதுள்ள  உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அக்கடிதத்ததில் அவர்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X