Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் பெரிய பள்ளிவாயலின் ஏற்பாட்டில் புத்தளம் நகரசபைக்குத் தெரிவான தலைவர் மற்றும் உறுப்பினர்களை கௌரவிக்கும் விஷேட நிகழ்வொன்று இன்று மாலை 4 மணிக்கு புத்தளம் பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்றது.
புத்தளம் பெரிய பள்ளிவாயலின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முஸம்மிலின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்தில் பிரதம குரு அம்பேகமுவ ரக்கித்த, புத்தளம் சித்தி விநாயகர் கோயிலின் பிரதம குரு சிவஸ்ரீ சுந்தர இராம குருக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகிய மும்மதங்களைச் சேர்ந்த மதப்பெரியார்ளின் ஆசிர்வாதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அத்துடன், இந்த வைபவத்தில் புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், பிரதித் தலைவர் புஷ்பகுமார உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்களுக்கு புத்தளம் பெரிய பள்ளிவாயல் நிருவாகத்தினரால் நினைவுக் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago