2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகர சேவையின் இரு மணித்தியால துப்புரவு சேவை

Kogilavani   / 2011 மே 03 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள குப்பை கூளங்கள், வடிகான்களில் சுத்திகரிப்பை முன்னெடுப்பதற்காக புத்தளம் நகரசபை விசேட இரு மணித்தியாலய சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் புத்தளம் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அவசரமாக துப்புரவு செய்ய வேண்டிய பகுதிகள் இருந்தால் வாரத்தில் ஒரு நாள் இரு மணித்தியாலயத்திற்குள் குறித்த பகுதிகளில் சிரமதானம் மூலம் துப்பரவுப் பணிகள் செய்யப்படும்.

இதற்கு நகர சபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன்,  பொலிஸார், இராணுவத்தினரின் உதவிகளையும் பெறவுள்ளதாக புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் நகர சபைக்குற்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் துப்பரவுப் பணிகள் ஏதும் முன்னெடுக்கப்படவிருந்தால் எழுத்து மூலம் நகர சபைக்கு அறிவிக்குமாறும் நகர சபைத் தலைவர் கோரியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X