Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 04 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
தன்னை பொலிஸ் உத்தியோகத்தரெனக் கூறிக்கொண்டு இளம் காதல் ஜோடியொன்றைப் பயமுறுத்தி அவர்களிடமிருந்து பணம் பெற முயன்ற ஒருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
புத்தளம் பிரதேச வில்லுவத்தை பிரதேசத்தில் சனநடமாட்டமில்லாத இடமொன்றில் மேற்படி காதல் ஜோடி தனிமையிலிருந்த வேளையில் அவ்விடத்திற்கு வந்த சந்தேக நபர், தான் பொலிஸ் உத்தியோகத்தரென்றும் இவ்வாறு இருவரும் தனிமையிலிருப்பது தவறென்றும் கூறி அவர்களைப் பயமுறுத்தியுள்ளார். அத்துடன் மறுநாள் காலை புத்தளம் பொலிஸ் நிலையம் வருமாறும் அதற்கு முன்னர் தனக்கு தொலைபேசி அழைப்பு விடுக்குமாறும் கூறி அவர்களின் மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரத்தை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் குறித்த இளைஞன் சந்தேக நபர் கொடுத்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டுள்ளார். இவ்விடயத்தை மேலிடத்திற்குக் கொண்டு போகாது முடித்துக்கொள்ள தனக்கு இரண்டாயிரம் ரூபாய் தரவேண்டுமெனவும் பணத்துடன் மறுநாள் காலை புத்தளம் பொலிஸ் நிலைய வாசலுக்கு வந்து தொலைபேசி அழைப்பு எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்தேகமுற்ற இளைஞன் இது தொடர்பில் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் காத்திருந்து சந்தேக நபர் குறித்த இளைஞனிடம் பணம் பெற முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டார்.
மேற்படி சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவரெனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago