2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தெலசீமியா நோயாளர்கள் அனுராதபுரத்தில் அதிகம்

Kogilavani   / 2011 மே 05 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

தெலசீமியா நோயாளர்கள்  அதிகளவில் காணப்படும் மாவட்டங்களில் அநுராதபுரம் மாவட்டம் 2ஆவது இடத்தில் உள்ளது என தெலசீமியா நோய் வைத்திய பிரிவின் டாக்டர் குமாரி திஸாநாயக்கா தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதிகளவில் சிறு குழந்தைகளுக்கே இந்நோய் பரவுவதோடு இரத்த உறவு முறைத் திருமணம் செய்வதே இந்நோய் பரவுவதற்குப் பிரதான காரணமாகும்.

தெலசீமியா நோயாளர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாக குருநாகல் மாவட்டம் முதலிடத்திலும் பதுளை மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.

உலக தெலசீமியா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தெலசீமியா சிகிச்சை மத்திய நிலையத்தினால் மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X