2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முந்தல் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2011 மே 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

முந்தல், கருக்கங்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றவளைத்த பொலிஸார் அங்கிருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்யும் உபகரணங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் பிரதான சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

பரல்கள் - 25, ஸ்பிரீட் போத்தல்கள் - 450, சட்டவிரோத மதுபானம் வடிக்கும் உபகரணங்கள், கேஸ் சிலிண்டர்கள் உட்பட பெருமளவிலான பொருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வீட்டிலிருந்தவாறு மேற்படி சந்தேகநபரினால் நீண்ட காலமாக இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேநகபரை உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X