Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 05 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
போதைப்பொருள் பாவனை ஊக்குவித்தல் தொடர்பான விடயங்களை ஊடகங்களில் குறைத்தல் பற்றி ஊடகவியலாளர்களுக்கான வதிவிடப் பயிற்சி செயலமர்வொன்று நேற்றும் நேற்று முன்தினமும் கொழும்பில் இடம்பெற்றது.
ஆரம்பநாள் நிகழ்வில் கொழும்புத்திட்ட போதைப் பொருள் ஆலோசனை நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் நுயன் குடுக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கொழும்பு திட்டத்தின் அனுசரணையில் வெகுஜன ஊடக அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த இரு நாள் கருத்தரங்கில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை உட்பட கொழும்பு திட்டத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர். இறுதி நாள் நிகழ்வில் கொழும்பு திட்ட செயலக பொதுச் செயலாளர் டாடோ பெட்ரீசியா யுன் மோய் சியா பிரதம அதிதியாக கலந்து கொணடார்.
செயலமர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதேவேளை, சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட வைபவமொன்றும் வெகுஜன ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடக துறையில் உயிர் நீத்தவர்களுக்காக சர்வமத வழிபாடு இடம்பெற்றதோடு அவர்கள் நினைவாக மெழுகுவர்த்திகளும் ஏற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago