2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோர் புத்திமதி கேளாத சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

Menaka Mookandi   / 2011 மே 06 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

பெற்றோரின் சொற்படி கேட்காது வீதிகளில் அலைந்து திரிந்த மூன்று சிறுவர்களைக் கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை புத்தளம், கியுல, விவசாயக் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் 12, 13 மற்றும் 16 வயதுடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் ஒழுங்கீனமாக நடந்துகொண்டிருந்த மேற்படி சிறுவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுவர்கள் தங்களின் சொற்படி கேட்பதில்லை என்றும் பாடசாலைக்குச் செல்லுமாறு கூறினால் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லை என்றும் அவர்களது பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்படி மூன்று சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிஸார், நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்களை புனர்வாழ்வுக்காக கல்கந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X