2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தலசீமியா நோயாளர்களை தெளிவுபடுத்த நடைபவனி

Menaka Mookandi   / 2011 மே 09 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு தலசீமியா நோயாளர்களைத் தெளிவுபடுத்தும் நடைபவனியொன்று நேற்று மாலை அநுராதபுரம் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா மத்திய பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடை பவனியில் வைத்தியர்கள், தாதியர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதுவரையில் நாட்டில் 1,600 தலசீமியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வருடமொன்றிற்கு 84,100 நோயாளர்கள் வரை கண்டுபிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலேயே அதிகளவில் தலசீமியா நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X