2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2011 மே 10 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

முன்னேஸ்வரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமண வைபவமொன்றிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மதகொன்றுடன் மோதிச்சென்று  முன்னேஸ்வரம் குளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.  

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முன்னேஸ்வரம் குளத்தில் வீழ்ந்ததாகவும் இந்த விபத்தில் காயமடைந்தவரை  அயலவர்கள்   மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சிலாபம் முகுனுவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த  கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் சாலிய சஞ்ஜய பெர்னாந்து என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X