Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 மே 10 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் புதிய சித்தார்ந்தமாக அரச கொள்கை ரீதியில் புதிய செயற்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டீ.எம்.ஷியாம் தெரிவித்தார்.
சமூகத்தின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் இலங்கையில் முதன்முதலாக வடமத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் ஆணையாளரினால் இச்செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரச சேவையில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்ற உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர். புதிதாக நியமனம் பெறுவோர் வடமத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு சட்டதி;ட்டங்களின் கீழ் தமது கடமையைச் செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளதுடன் இவர்களுக்கான நியமனங்கள் மே மாதம் இறுதிக்குள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்திற்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டீ.எம்.ஷியாம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இத்திட்டத்திற்கு ப்ளேன் ஸ்ரீலங்கா நிறுவனம் நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் வடமத்திய மாகாண சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் திட்டப் பொறுப்பாளருமான் எம்.டீ.எம்.ஷியாம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .