2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வீதியை புனரமைக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Kogilavani   / 2011 மே 11 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை - புத்தளம் ஏ12 வீதியின் அனுராதபுரம் சந்தி முதல் ஹொரவபொத்தானை வரையான பகுதியை அவசரமாக புனரமைக்குமாறு ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவிடம் மொறவெவ பிரதேசசபை தலைவர் டபிள்யூ.ஆர்.றம்பண்டா கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அக்கடிதத்தில்  இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இவ்வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. வீதி புனரமைப்பு பணிக்கென கிரவல் போடப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் தூசுகளால் வீதியை  அண்மித்து வாழும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக தூசுகளால் ஏற்படும் தொய்வு நோய் பாரிய அச்சுறுத்தலைஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்நோயினால் அதிகமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே மிகவிரைவில் இப்பாதையை புனரமைத்துத் தருமாறு வேண்டிக்கொள்கின்றேன் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X