2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பால்நிலைசார் வன்முறைகளினை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வு

Super User   / 2011 மே 24 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தில் கடந்த வருடங்களி;ல் இடம்பெற்ற பால்நிலைசார் வன்முறைகளினை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ.சீ.பண்டார, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.தர்மசேன உட்பட பொலிஸ்  அதிகாரிகள், சட்டதரணிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

சைல்ட் விஸன் இலங்கை நிறுவனத்தின் பிரதான பங்களிப்புடன் புத்தளம் மாவட்ட பால்நிலை சார் வன்முறைக்கெதிரான அமைப்பினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X