Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 25 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
சுகவீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமான புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்தின் பிரதம மதகுரு அப்பேகமுக ரக்கித்தகிமி தேரரின் பேழை தாங்கிய வாகனம் இன்று புதன்கிழமை மாலை புத்தளம் நகருக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக சுகவீனமுற்றிருந்த குறித்த மதகுரு முதலில் புத்தளம் தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் காலமானார்.
மதகுருவின் பேழை தாங்கிய வாகனம் இன்று காலை முதல் கம்பஹா மாவட்டத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இவரது பேழை தாங்கிய வாகனம் புத்தளம் மாவட்டத்தை வந்தடைந்ததும் புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்தில் விஷேட பிரார்த்தனைகளும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவர் காலமானதையடுத்து புத்தளம் நகர் முழுதும் செம்மஞ்சல் கொடிகள் தொங்கவிடப்பட்டிருப்பதுடன், வாகனங்களிலும் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இறுதிக் கிரிகைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .