Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 28 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ் )
புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்தின் பிரதான பீடாதிபதியும், புத்தளம் ஆனந்தா தேசிய கல்லூரியின் பிரதி அதிபருமான காலம் சென்ற அப்பேகமுக ரக்கிதகிமி தேரரின் இறுதி கிரியைகள் இன்று மாலை நடைபெற்றது.
பௌத்த மத்தியஸ்தானத்திலிருந்து நகர சபை மைதானத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி கிரியைகள் நடைப்பெற்றது.
சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, அமைச்சர்களான குணரத்ன, பிரியங்கர ஜயரத்ன, தயாசிறி திசேரா மற்றும் எதிர்க்கட்சி பிரதி தலைவர் கரு ஜெயசூரிய உட்;பட பாரளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், அனைத்து மதத்தலைவர்கள் ஆகியோருடன் அரச அதிகாரிகளும் பொது மக்கள் பலரும் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர்.
ஜனாதி;பதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் டி.எம். ஜயரத்ன அவர்களினதும் இறங்கல் உரையினை புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்சிலி பெர்னாண்டோ வாசித்தார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினது இரங்கல் உரையினை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார வாசித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .